2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படை சான்றிதழ் தேர்வு

சென்னையில் தேசிய மாணவர் படை சான்றிதழ் தேர்வை 8,500 பேர் எழுதினார்கள்.

2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படை (என்.சி.சி.) ”சி” சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் 25 இடங்களில் நேற்று நடைபெற்றது. ராணுவம், கடற்படை, விமானப்பிரிவில் 3 ஆண்டு பயிற்சியை பெற்ற 8 ஆயிரத்து 500 தேசிய மாணவர் படையினர் சிறப்புப்பாடத்திட்டத்தில் இந்த சி சான்றிதழ் தேர்வை எழுதினார்கள். 100 அதிகாரிகள், 90 தேசிய மாணவர் படை உதவி அதிகாரிகள், 750 பணியாளர்கள் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.

பொதுவாக தேசிய மாணவர் படையில் ஏ மற்றும் பி சான்றிதழ்கள் பெறுபவர்கள் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்பிரிவில் அதிகாரியாக சேருவதற்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத்தேர்வில் இருந்து விலக்கு பெறுவார்கள். அதேபோல், சி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசு அமைப்புகள் போனஸ் மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 25 இடங்களில் நடந்த தேர்வை தேசிய மாணவர் படை இயக்குனரகமும், டெல்லியில் உள்ள தலைமையகமும் ஆன்லைன் (நேரடி ஒளிபரப்பு) மூலம் கண்காணித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 82