2022 ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் தொடக்கம்:தொடரில் இணையும் இரு புதிய அணிகள்

ஐபிஎல் 2022 தொடரில் மேலும் இரு அணிகள் வர உள்ளதால் 60 நாட்களையும் தாண்டி ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது.

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கொரோனா பரவல் காரணமாக இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 4 அல்லது 5ம் தேதி நடைபெறும். ஐபிஎல் அணிகளுக்கு இந்த தேதியினை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் சீசனில் அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும் கடந்து நடைபெறும் என்று தெரிகிறது. அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை – மும்பை அணிகள் மோதுவதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பரில் ஏலம் நடைபெற்று முடிந்தவுடன் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1