சேவாலயா முதியோர் இல்லத்தின் சார்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

சேவாலயா முதியோர் இல்லத்தின் சார்பில் 500 முன்களபணியாளர்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பணியில் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலர் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே தளவாய்பாளையத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா முதியோர் இல்லத்தின் சார்பில் வோல்டர்ஸ் குலுவர் நிறுவனம் வழங்கிய 500 முன்கள பணியாளர்களுக்கான கோவிட் பாதுகாப்பு உபரணங்களை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயமிடம், சுகாதாரப்பணிகள் துணை கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில், தளவாய்பாளையம் சேவாலயா முதியோர் இல்லம் மையத்தலைவர் திவாகர், கண்காணிப்பாளர் மகாவிக்னேஷ் ஆகியோர் வழங்கினர்.