உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு 1,050 மரக்கன்றுகள் வழங்கல்

உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு 1,050 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் சி.எம்.ஆர்.மணிமொழியன் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளான இன்று சுற்றுச்சூழலைக் காக்கவும், பொதுமக்கள் காவல்துறையினர் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், உளுந்தூர்பேட்டை பகுதி பொது மக்களுக்கு, உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் அப்பன்டராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜி, திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருட்செல்வன், எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மாணிக்கம், இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 1,050 மரக்கன்றுகளை, ஊரடங்கு நேரத்தில் முகக்கவசம் அணிந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தவர்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் அனைத்து காவல் நிலைய காவலர்களும் மற்றும் பெண் காவலர்களும் உடனிருந்தனர்.