மும்பை அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தார் தேர்வு

மும்பை கிரிக்கெட் சங்கம் மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அமோல் முசும்தாரை தேர்வு செய்துள்ளது.

முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் அமோல் முசும்தாரை மும்பை அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்துள்ளது.

ரஞ்சி கோப்பையை 41 முறை வென்று சாதனை படைத்த மும்பை அணி, 2015-16க்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையை வெல்வதே முதல் லட்சியமாக இருக்கும் என முசும்தார் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் 2019ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் முசும் தார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.