நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும், ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வீரர்களாக விக்கெட் கீப்பர் ஜேம்ஸ், பிரேசி, வேகப்பந்து வீச்சாளர் ஓலி ராபின்சன் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. காயம் காரணமாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல் ஐபிஎல். போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மொய்ன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், சாம்குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.