புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஸ்பீடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் விதம் பற்றியும், நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும் தன்னார்வலர்களுக்கு முககவசம், கிருமிநாசினி மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கான அடையாள கைப்பட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள், பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − = 56