பாகிஸ்தானில் பயங்கரம் : கால்வாயில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் கால்வாயில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் உறவினர்களை சந்திப்பதற்காக சென்ற ஒரு குடும்பத்தினர் சந்திப்பிற்கு, பின்னர் வேன் ஒன்றில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்தபொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மியான்வாலி கால்வாயில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த குழந்தைகள் 7 பேர், பெண்கள் 3 பேர், ஆண் ஒருவர் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =