தமிழகத்திற்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – பிரதமருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பிரதமருர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்கும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் மருந்துகள் அதிக அளவில் வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 23 = 26