குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி : சிவகங்கையில் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் துவக்கி வைப்பு

சிவகங்கை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் தமிழக அரசின் கொரோனா கால நிதி உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தமிழகமெங்கும் கொரோனா தொற்று பரவல் 2ம் அலையாக மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு அதிக கட்டுப்பாடுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் திமுக தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம்,  திருப்பத்தூரில் முதற்கட்டமாக பயனாளிகளுக்கு ரூ. 2000ஐ ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அரளிக்கோட்டை மற்றும் காஞ்சிரங்கால் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கொரோனா கால நிவாரண நிதியினை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட துணை செயலாளருமான மணிமுத்து, சேங்கைமாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் இளையான்குடி அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பயனாளிகளுக்கு கொரோனா நிதியை வழங்கினார். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 829 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ. 8,57,08,000  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =