உளுந்தூர்பேட்டையில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக இந்த மாதத்தில் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை தொகை 2000 பெறுவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று நியாயவிலைக்கடை ஊழியர்கள் வழங்கினர்.

இந்நிலையில் இன்று உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கும் பணியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிகண்ணன் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி முதல் தவணை தொகை 2000 வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் எனபலர் கலந்து கொண்டனர். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளுடன் நாள் ஒன்றுக்கு 200 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 70 = 79