ஆலங்குடி பகுதியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முதலில் கொரோனா நிவாரண நிதியாக தமிழக மக்களுக்கு ரூபாய் 4,000 ஆயிரம் திட்டத்தை அறிவித்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் இரண்டு தவணையாக ரூபாய் 2000 வீதம் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார் .

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் திருவரங்குளம் ஒன்றியத்தில் அமைச்சர் பல்வேறு இடங்களில் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா  நிவாரணத்தொகையை இன்று வழங்கினார்.

இந்நிலையில், முதல் தவணையான 2,000 ரூபாய் வழங்கும் விழா விழாவில் ஆலங்குடி, கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, வடகாடு, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதார்களுக்கு தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் கொரோனா நிவாரண நிதியாக ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் கொரோனா நிவாரண நிதிக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூபாய் 5 ஆயிரத்தை தாயார் விஜயகுமாரி நினைவாக பிச்சமுத்து என்பவரின் மகள் நிலவரசி(6), மகன் சபரிதரன்(4) ஆகியோர் அமைச்சரிடம்  வழங்கினர்.

இந்நிகழ்வில், திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, தங்கமணி, டி.ஆர்.ஓ சரவணன், தாசில்தார் கருப்பையா, போலீஸ் டி.எஸ்.பி முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 5 = 7