ஆலங்குடி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள தைல மரங்கள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி கிராமத்தில் ஆலங்குடி தைக்கால் தெருவைச் சேர்ந்த அமீர்பாட்ஷா என்பவருக்கு சொந்தமான தைலமரத் தோட்டத்தில் தைல மரங்கள் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதைப்பார்த்த ஆயிப்பட்டி கிராம மக்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து வந்து பரவலாக எரிந்துகொண்டிருந்த தைல மரங்களை சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தைல மரங்கள் எவ்வாறு தீ பிடுத்து எரிந்திருக்கும் என்பது குறித்து ஆலங்குடி போலீசார் பலகோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் எரிந்து நாசமான தைல மரத்தின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =