கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது ரூ.25 லட்சம் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர். இதே போல் நடிகர் ரஜினியின் சார்பில் அவரது மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி வழங்கினார். தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சௌர்ந்தயா நிதி வழங்கினார்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளார். முதலில் அவர் ரூ.2.5 கோடி வழங்கியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 + = 46