நடிகர் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே அவர் தீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். திரையுலகை கடந்து அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட மன்சூர் அலிகான், அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் கூட போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பேசியதாக 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு பின்பு ஜாமின் வழங்கப்பட்டது. சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3