கொரோனாவை பரவும் இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் : நடிகை அனுஷ்கா

கொரோனா பரவும் இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நடிகை அனுஷ்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கொரோனா தொடர்பான உதவிகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை அனுஷ்கா, கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வழிகாட்டு முறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். சுய ஊரடங்கை கடைபிடிப்போம். சில மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். ஒவ்வொரு நாளையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகுங்கள். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − = 72