செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் : எம்எல்ஏ ஜோதி

செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு  புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க முழு முயற்சி எடுப்பேன் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஓ.ஜோதி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் ஓ.ஜோதி. இவர் அதிமுக வேட்பாளரை விட 12,271 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  பிறகு செய்யாறு தொகுதியில் அடிப்படை  வளர்ச்சிக்கும் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று தருவேன். தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததை  நினைவுபடுத்தி செய்யாறு  தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைய முழு முயற்சி எடுப்பேன் தமிழகத்திலேயே செய்யாறு தொகுதி தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக அமைய அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்வேன் என்றார்.உடன் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வந்தவாசி லோகநாதன், ஜே.கே.சீனிவாசன், புரிசை எஸ்.சிவகுமார் மற்றும் இருந்தனர்.