அடிமட்டத்திலிருந்து தன் உழைப்பால் உயர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் : கருணாஸ்

அடிமட்டத்திலிருந்து தன் உழைப்பால் உயர்ந்து ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சிறந்த  நிர்வாக திறமையுள்ள ஸ்டாலின் தமிழகத்தின் இழந்த உரிமைகளை மீட்பார்.எடப்பாடி அரசு கடுமையாக கடன் சுமையோடு தமிழகத்தை விட்டு சென்றுள்ளது அதையெல்லாம் ஸ்டாலின் மீட்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை புறக்கணித்து குறிப்பிட்ட சில சமூகங்களை மட்டும் ஒருங்கிணைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது.முக்குலத்தோர் சமூகத்தை அரசியல் அநாதையாக்க நினைத்தார்கள் அதன் காரணமாக இன்று தோல்வியை சந்தித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி திமுக விற்கு வாக்களித்துள்ளனர் என்றார்.