ராஜஸ்தானில் 6 ,7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு

கொரோனா 2-ம் கட்ட அலை பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநில இடைநிலைக்கல்வி வாரியம் 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், பள்ளிகளில் இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் இறுதித்தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவ-மாணவிகளை இறுதித்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன.

இதனால் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கொரோனா 2-ம் கட்ட அலை பரவி வருகிறது. இந்த முறை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநில இடைநிலைக் கல்வி வாரியம் 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 + = 88