மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

மகாராஷ்டிராவில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேககமாக பரவி வருகிறது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முழு ஊரடங்கு 8, 15 அல்லது 21 நாட்களுக்கு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்த இறுதி முடிவை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைமறுநாள் அமைச்சர் சபையை கூட்டி முடிவு எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மகாராஷ்டிராவில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் உடல் நலனுக்கே முன்னிரிமை என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா அரசு, மே மாத இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜுன் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில்  கொரோனா சூழல் மேம்படுவதை பொருத்து தேர்வு நடைபெறும்.  சரியான தேதி பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6