நாமக்கல் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் திமுக சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கேஆர்என்.ராஜேஷ்குமார் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார்.

கோடைகாலத்தில் பொதுமக்களின் நலன்காக்கும் பொருட்டு அவர்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரையின் படி, நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரத்தில், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர் துரை (எ) ராமசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கேஆர்என்.ராஜேஷ்குமார் தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார். இதில் நீர்மோர், தர்பூசணி, எலுமிச்சைஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் திலகவதி, புகழேந்தி, கண்ணன், ஒன்றிய துணைத் தலைவர்கள் முருகேசன், புகழேந்தி, பொறுப்புக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் குணாளன், ஜெயபிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நீலமேகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜகோபால், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், அன்பரசு, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, ராஜகோபால், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், கிளைச் செயலாளர் மணி மற்றும் கலங்காணி பாலு உட்பட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 53 = 62