நாமக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுடன் சார் ஆட்சியர் ஆலோசனை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட வணிகர்களுடன் சார் ஆட்சியர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து இன்று மாவட்ட சார் ஆட்சியர் அலுவலத்தில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நாமக்கல் மாவட்ட சார் ஆட்சியர் கோட்டை குமார் முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். வணிக நிறுவனங்கள் கடைபிடிக்கவேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும், வணிகர்களும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். மேலும் வணிகர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பும் தருவதாக நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் உறுதியளித்தார்.

முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு முககவசம் கொடுத்தும் கடைகளுக்குள் செல்ல வணிகர்கள் அனுமதித்தாலும், சில நேரங்களில் அதிகாரிகள் சோதனை செய்ய வரும் போது வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாதிருப்பின் அதற்கான அபராதத்தை வணிக நிறுவனத்திடம் வசூலிக்காமல், பொது இடத்தில் முககவசம் அணியாதோருக்கு எவ்வாறு அபராதம் விதிக்கப்படுகிறதோ அதே போலவே வணிக நிறுவனங்களுக்குள் முககவசம் அணியாதோருக்கு அவர்களிடமே அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =