தமிழகத்தில் இன்று 6,711 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் இன்று மேலும் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,40,145 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,339 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,80,910 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,67,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,06,03,108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,982 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 46,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,67,514 பேர் ஆண்கள், இன்று மட்டும் 4,036 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,72,595 பேர் பெண்கள், இன்று மட்டும் 2,675 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 4