அரியானாவில் இரவு நேர ஊரடங்கு அமல் : அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை அதிகரிப்பதன் காரணமாக அரியானா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அரியானாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார். அரியானாவில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 6