ஆலங்குடி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியம்       வல்லத்திராக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகூர்கனி  மகன் அசாருதீன் (26) என்பவருக்கும் அரிமளத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் பந்தயப் போட்டியில் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அசாருதீன் என்பவர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெ ற்று விளையாடி வருகிறார் . தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்பகிறது. இந்நிலையில் ஐயப்பனுடன் அசாருதீன்  சில வாரங்களாக பேசி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி அன்று ஐயப்பன் என்பவர் அசாருதீன்னை அழைத்து சென்று, அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து நிலைகுலைய வைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் சுமார் 4 மணி  அளவில் மிரட்டுநிலையிலிருந்து  வன்னியம்பட்டி செல்லும் வழியில் உள்ள முனிகோவில் அருகில் மர்மமான முறையில் அசாருதீன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உறவினர்கள்  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் இச்சம்பவத்தை  குறித்து கடந்த 2  நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டை நீலம் பண்பாட்டு மையத்தின் மாவட்ட நிர்வாகி முருகானந்தம் முன்னிலையில் அசாரூதீ ன் குடும்பத்தினர் மாவட்ட எஸ்பி-யிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் அசாருதீன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும்  நண்பா்கள் ஐயப்பன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாவட்ட எஸ்பியிடமும் , மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுவை நேற்று காலை மீண்டும் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும்,  மேலும் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யகோரியும் நேற்ற இரவு புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, வல்லத்திராக்கோட்டை பஸ் நிறுத்தமிடத்தில் அசாருதீன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த வல்லத்திராக்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் புதுக்கோட்டை டிஸ்பி போலீசார்  ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில் இப்போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஐயப்பனை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − 46 =