கொரோனா தடுப்பூசியின் 2-ம் டோஸை செலுத்திக்கொண்டார்: பிரதமர் நரேந்திரமோடி!!!

கொரோனா தடுப்பூசியின் 2-ம் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமா் நரேந்திர மோடி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் அதிகரித்து வருவதால், மத்திய கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி.  முன்னதாக அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.  

இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார். கடந்த ஆண்டை விட கொரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4