செக் மோசடி வழக்கு: சரத்குமார் தண்டனை நிறுத்தி வைப்பு; ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு!!!

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு விதித்த  ஓராண்டு சிறை தண்டனை  சிறப்பு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும்  நடிகை ராதிகாவுக்கு  பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், பங்குதாரர் லிஸ்டீன் ஸ்டீபன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, மேல்முறையீடு செய்ய ஏதுவாக எம்.பி., எம்.எல்.ஏ பற்றிய வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், 30 நாட்கள் நிறுத்திவைத்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத காரணத்தால் ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகர் சரத்குமார், ராதிகா பங்குதாரர்களாக இருக்கக்கூடிய ‘மேஜிக் ப்ரேம்’ என்ற நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து’இது என்ன மாயம்’என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து 1. 5 கோடியை பெற்றுள்ளது. இந்தக் கடனை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பிதந்த பிறகு, படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால் சரத்குமார் தரப்பு கடனை திருப்பிக்கொடுக்காமல் ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்தது. இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சரத்குமார் தரப்பு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் சரத்குமார் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட 7 செக்குகளும் பணமில்லாமல் திரும்பி வந்து விட்டதாக குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் சரத்குமார் தரப்பு செக் மோசடியில் ஈடுபட்டதை ஆதாரங்களின் வாயிலாக உறுதிப்படுத்தியது. அதனடிப்படையில் சரத்குமார் மீது 7 வழக்குகள் போடப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்தது.

மேலும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் அவர்களுக்கு தலா ஒருவருடம் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து சரத்குமார் தரப்பில் இருந்து, தண்டனை மூன்று வருடங்களுக்கு கீழான தண்டனை என்பதால் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.

மேலும் சரத்குமார் தரப்பு கூறும்போது, “ மோசடி செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை. பணத்தை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் ரேடியன்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து வட்டியுடன் சேர்த்து 2.5 கோடி கேட்கப்படுகிறது. இது அதிகப்படியான தொகை. நாங்கள் படத்தின் விநியோக உரிமையை தர தயாராக இருக்கிறோம். மோசடி செய்யவேண்டும் என்ற உள் நோக்கத்தில் செயல்படாததால் இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 45 = 52