டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.  இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து, 10-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டிக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று உறுதியானதையடுத்து, அக்சர் படேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதகாவும் டெல்லி அணி நிர்வாக வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =