கொரோனா எதிரொலி: ஐபிஎல் 2021 போட்டியின் போது கடைபிடிக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ!!!

ஐபிஎல் 2021 போட்டியின் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் செப்.19ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அதற்காக அங்குள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் 8 ஐபிஎல் அணிகளும் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நவ.3ம் தேதி வரை நடைபெறும். இவற்றில் துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும். சில சனி, ஞாயிற்றுகிழமைகளில் என 10 நாட்கள் மட்டும் ஒரே நாளில் தலா 2 ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும். அபுதாபியில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த முறை 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி, இறுதிப் போட்டி நடைபெறும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். இறுதிப் போட்டி நவ.10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பயிற்சியைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் போது கடைபிடிக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

வீரர்கள் யாரேனும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்; பயோ-பபுள் சூழலுக்குள் வருவதற்கு முன் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பின்புதான் அனுமதிக்கப்படுவார்.

வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க தனியாக கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்; இவரின் பணி, வீரர்கள் பயோ-பபுள் சூழலை மீறுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும்தான்.

ஒட்டுமொத்தமாக 12 பயோ-பபுள் சூழல் உருவாக்கப்பட்டுள்ளன; 8 பயோ-பபுள் சூழல் வீரர்களுக்கும், 2 பயோ-பபுள் சூழல் அணி நிர்வாகிகள், உதவியாளர்களுக்கும், 2 பயோ பபுள் சூழல் ஊடகப்பிரிவினர் ஆகியோருக்கும் வழங்கப்படும்.

பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் நுழையும் முன் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; பயோ-பபுள் சூழலுக்குள் வீரர் ஒருவர் செல்லும்போது, 7 நாட்கள் தனிமைக் காலத்தில் 2-ம் நாள், 5-ம் நாள், 7-வது நாள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக இருக்க வேண்டும். முறையான பரிசோதனை இல்லாமல் அணி உறுப்பினர்களுடன் கலந்துரையாட அனுமதியில்லை.

7 நாட்கள் தனிமைக் காலம் முடிந்தபின், ஒவ்வொரு வீரருக்கும் வாரத்துக்கு இரு முறையும், 2-வது வாரம், ஒவ்வொரு வாரத்திலும் 5-வது நாளும் என ஐபிஎல் சீசன் முடியும் வரை கொரோனா பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும். இந்த விதிமுறை வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.

இங்கிலாந்து, இந்திய ஒருநாள் தொடரில் இரு அணி வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வருவதால், அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் முறை இல்லை. வீரர்கள் நேரடியாக தாங்கள் சார்ந்திருக்கும் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்லலாம்.

வீரர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அணியில் இணையத் தனியாக விமானம், அல்லது ஹோட்டலுக்குச் செல்ல தனிப்பட்ட பேருந்து வசதி செய்யப்படும். இங்கிலாந்து வீரர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்களும் பயோ-பபுள் சூழலில் இருந்து வந்தால் தனிமைப்படுத்தும் காலம் இல்லை. ஐபிஎல் தொடரில் தாமதமாக அணிகளில் சேரும் வீரர்கள் தங்கள் அணியின் பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு தனிமைக் காலத்தை முடித்துவர வேண்டும்.

வீரர்களில் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அவருக்கு 9-வது 10-வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும். எந்தவிதமான அறிகுறியும் இருக்கக் கூடாது. இந்த விதிமுறை அறிகுறி உள்ள வீரர்களுக்கும், அறிகுறி இல்லாத வீரர்களுக்கும் பொருந்தும்.

ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது. மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட பிரிவு ஒதுக்கவில்லை என்பதால், தடுப்பூசி போடக்கூடாது இவ்வாறு பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − 61 =