நீதிமன்றங்கள் மூடப்பட்டதை கண்டித்து தஞ்சாவூரில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர்!!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகள் மூடப்பட்டதை கண்டித்து தஞ்சையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா தாக்கம் அதிகரித்தன் காரணமாக மார்ச் 8 முதல் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றம் வரலாம் எனவும், மற்றவர்கள் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என்றும் வழக்கறிஞா்கள் அறை மூடப்படுவதாகவும் அறிவித்திருந்தது. உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகள் மூடப்பட்டதை கண்டித்து தஞ்சையில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வழக்கறிஞர்கள் கூறியாதாவது.,

தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கவும் பொது கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கும் அரசு கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி நீதிமன்றத்தை மூடி இருப்பது கண்டனத்திற்குரியது. எனவே உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றை திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவா்கள் இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும் எனவும், வாழ்வாதாரம் பாதிக்கும் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். இதில் வழக்கறிஞர்கள் சிவசுப்ரமணியம், நல்லதுரை முகுந்தன், கருணாகரன், அமர்சிங், மோகனசுந்தரம், கோபி ரவிபாலன், முல்லை வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 81 = 84