தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு பெருகும் ஆதரவு!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், மனிதநேய ஜனநாயகக் கட்சியும் முழு ஆதரவு தருவதாக அக்கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைப்பெறும் எனவும், அதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முந்தைய தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸால் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.

தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன்பு முக்குலத்தோர் புலிப்படை கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் அஜய் வண்டையார், திமுகவின் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் வழங்கினார். மேலும் திமுகவில் கூட்டணியில் கருணாஸ்க்கு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதித் தமிழர் பேரவை ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 22 = 23