ஆலங்குடியில் வீட்டு வேலைக்கு வராத தாயை கண்டித்து மகளுக்கு போலி திருமண பத்திரிக்கை அடித்து அவதூறு பரப்பியவர் கைது!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனது வீட்டு வேலைக்கு தாய் வராத ஆத்திரத்தில் அவரது 17 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்ப துபோல் போலி பத்திரிகை அடித்து விநியோகம் செய்து சிறுமிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதாக சிபிஐஎம்எல் கட்சியின் கிளைச்செயலாளர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் சிபிஐஎம்எல் கட்சியில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்புவரை முத்துமணி என்ற கணவரை இழந்த பெண்  வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி நடத்தை சரியில்லாததால் அங்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட் டார்.

இதன் பின்பு சுந்தரமூர்த்தி அவரைப் பலமுறை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார்.ஆனால் முத்துமணி மறுத்துவிடவே, ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அப்பெண்னின் 17 வயது மகளுக்கு திருமணம் நடைப்பெற உள்ளதுபோல் போலியாக பத்திரிக்கை அச்சடித்து அதில் யார் என்று தெரியாத ஒரு பெயரை மணமகனாக குறிப்பிட்டு அந்தப் பத்திரிகையை பல்வேறு பகுதிகளுக்கும் பரப்பி உள்ளார்.

மேலும் முத்துமணியின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது வீட்டிலும் அந்தப் பத்திரிகையை வைத்துவிட்டு அவரது வீட்டினுள் இருந்த ஆதார் கார்டு, பான் கார்டு, உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து முத்துமணி சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் கொ லை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து முத்துமணி ஆலங்குடி காவல்நிலை யத்தில் புகார் அளித்ததோடு, தனது குடும்பத்தின் பெயரை கெடுக்கும் வகையில் தனது சிறுவயது மகளுக்கு போலியான திருமண பத்திரிக்கை அடித்து அவமானப்படுத்திய சுந்தரமூர்த்தியை கைது செய்யவேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். முத்துமணி அளித்த புகாரின் அடிப்படையில் சுந்தரமூர்த்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =