அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ. 1 லட்சம் வழங்கு திட்டத்திற்கு செனட் சபை ஒப்புதல்!!!

அமெரிக்க அதிபர் பைடனின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி திட்டத்திற்கு  சென்ட் சபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியது. இதற்கு செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.‌ அங்கு தொற்று மற்றும் அதனால் நிகழும் உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது.

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில்  ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில் அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை உள்ளடக்கிய சுமார் 139 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க மீட்பு திட்டம் என்ற திட்டத்தை அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்திருக்கிறார்.

செனட் சபையில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக கட்சியின் 50 உறுப்பினர்களும், எதிராக குடியரசு கட்சிகளின் 50 உறுப்பினர்களும் வாக்களித்தனர். செனட் சபை தலைவரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

அடுத்தகட்டமாக இந்த மசோதா ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர அதிபர் ஜோ பைடன் தீவிரம் காட்டி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 83