8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பெற்றது.

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன், இந்திய அணியை முதலில் பேட் செய்ய கூறினார். 

இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்வுமன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க கேப்டன் மிதாலி ராஜும், ஹர்மன்ப்ரீத் கவுரும் இன்னிங்ஸை ஸ்டெடி செய்தனர். இருவரும் 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மிதாலி தனது 54வது ஒருநாள் கிரிக்கெட் அரை சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 177 ரன்களை குவித்தது.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 40.1 ஓவரில் 178 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணியின்  தொடக்க வீரர்கள் இருவரும் 169 ரன்களை குவித்தனர். அது வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − = 15