14-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் ஏப்ரல் 9-ல் தொடக்கம்!!!

மும்பை:  ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் 14-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது என்றும், மே 30-ஆம் தேதி முடிவடையும் என்றும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

14-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.9-ம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் களம் இறங்கவுள்ளனர். மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் 6 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்துகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகள் நடைபெறவுள்ளன என ஐபிஎல் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் உள்ள எந்த அணிக்கும் இம்முறை சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது. தொடரின் முதற்கட்ட போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை எனவும், பிற்பகுதியில் சூழலுக்கேற்ப முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை-டெல்லி மோதியது. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்.19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் வீரர்கள் பல பேர் அதிக விலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 34 = 40