மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த  அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =