மாநில அளவிலான பெண்கள் கோகோ விளையாட்டு போட்டி அறந்தாங்கி அருகே நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கோகோ கழகம் சார்பாக மாநில அளவிலான பெண்கள் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருவப்பாடி கிராமத்தில் விழாஅரங்கு ஒன்றில் மாவட்ட கோகோ கழகம் சார்பாக பெண்களுக்கான மாநில அளவிலான கோகோ விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாநில அளவில் சென்னை, திருவாரூர், நெய்வேலி, சிவகங்கை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டது. ஒரு அணிக்கு 12 பேர் வீதம் போட்டியில் கலந்துகொண்டனர். ஒரு போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் 20 நிமிடம் இரண்டு கள நடுவர்களும் ஒரு தலைமை நடுவரும் போட்டிகளை வழிநடத்தினர். வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 8 ஆயிரத்து 1 ரூபாய் மற்றும் 6 அடி உயரமுள்ள கோப்பை வழங்கப்பட்டது.
16 அணிகளில் வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு நான்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான கேடயம் வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்ற ஸ்ரீ சரியாளம்மன் போர்ட்ஸ் கிளப் அத்தாணி அணிக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசை கோவை மாவட்ட அணியும் மூன்றாவது பரிசை ஈரோடு மாவட்டம், நான்காவது பரிசை திருச்சி மாவட்ட அணியும் கைப்பற்றியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே அணி சுழல் கோப்பையை வைத்திருந்தால் அந்த கோப்பை அந்த அணிக்கு சொந்தம் என்றும் அறிவிக்கப்பட்டது. பெண்களுக்காக தனியாக நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு போட்டியாகும் இந்த கோகோ விளையாட்டு போட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 11 =