மத்திய அரசுக்கு வரி உயர்வால் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார்

2021-2022 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் பின் பேசிய அவர் மத்திய அரசுக்கு வரி உயர்வால் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. மேலும் தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது எனவும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும். பின்னர் உரையாற்றிய அவர்;



அடுத்த ஓராண்டில் தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்; தற்போது அரசின் கடன்சுமை ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

2021-22-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும் என்றும், 2021-22-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94%, ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது என்றும் கூறினார்.

கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நீர்வள துறைக்கு ரூ6,453 கோடி நிதி ஒதுக்கீடும், உள்ளாட்சி துறைகளுக்கு ரூ22,218 கோடி நிதி ஒதுக்கீடும், சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு; செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடும், புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3,700 கோடி நிதி ஒதுக்கீடும், நெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 90% லிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.



மேலும் பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடும், தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடும், காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடும், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

எல்ஐசி மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு காப்பீடு திட்டம். அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும். அவிநாசி – அத்திக்கடவு திட்டம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு. அருட்பெருஞ்சோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
 
தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு. 8 ஆண்டுகளுக்குப் பின் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 15.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ1,715 கோடி நிவாரணம். இயற்கை பேரிடர்: 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை ரூ13,000-ல் இருந்து ரூ20,000 ஆக உயர்வு. நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2021-22ம் ஆண்டில் கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு. தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமலில் உள்ளது. ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் ரைட்ஸ் சிறப்பு திட்டம் ஏற்படுத்தப்படும். 2020-21ம் ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11,943.85 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு. 2021-22ம் ஆண்டில் நீதித்துறைக்கு ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு. 2021-22ம் ஆண்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.6023.11 கோடி  ஒதுக்கீடு. தமிழகத்தின் வரி வருவாய் 17.64% குறைந்துள்ளது

தமிழகத்தின் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாக அதிகரிப்பு. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.688.48 கோடி ஒதுக்கீடு. திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் திறந்தவெளி அரங்கம் கட்ட ரூ.9 கோடி வழங்கப்படும்.

இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறைக்கு 2021-22-ல் ரூ.229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31க்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 + = 51