தமிழக சட்டப்பேரவையில் 3 தலைவர்களின் திருவுருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்!!!

தமிழக சட்டப்பேரவையில் 3 தேசிய தலைவர்களின் திருவுருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.

ராமசாமி படையாட்சியாரின் படத்தை தொடர்ந்து வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி  தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சிதம்பரம், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்கள் உருவப்படத்தின் எண்ணிக்கை 15- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினரும் பங்கேற்றனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றப்பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 + = 44