தமிழகத்தில் வளிமண்டல சுழற்சிக் காரணமாக நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்குள் கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி எதிரொலியாக 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: கேரளாவின் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.