கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டை உடைத்து 15 பவுன் தங்கநகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விஏஓ பாரதி, இவரது மனைவி அனுசியா. அந்த வீட்டில் இருவர் மட்டும் வசித்து வருகின்றனர். பாரதிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கும்பகோணத்தில் அவரது வீட்டுக்கு வந்த போது மர்ம நபர்களால் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இரண்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து திருடர்களை தேடி வருகின்றனர். இவரது மகள் ஒரிசாவில் வசித்து வருகிறார்.


