இணைந்து பணியாற்றுவோம் வாருங்கள் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நேற்று, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். என்ன பேசினார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலைக் கவனித்துக் கொண்டுள்ளார். வாய்ப்பு இருக்கிறது என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.