திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு)தமிழிசை சௌந்தர்ராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம். திருக்கடையூர் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு மட்டுமே தினமும் ஆயுட்ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தர்ராஜன் குடும்பத்துடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட கலெக்டர் இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் தருமபுரம் ஆதீன தம்பிரான் மீனாட்சிசுந்தரம் சுவாமிகள் கோவில் நிர்வாகம் நிர்வாகத்தினர், கணேஷ் குருக்கள் தலைமையில் பாலாஜி குருக்கள், பாஜக நிர்வாகிகள் கோயில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கோ பூஜை மற்றும் பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டார். பின்னர் ஆளுநர் கோவிலுக்கு சென்று முதலில் வில்வநாதன், விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் ஆகிய சாமி சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உலக மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்ததாகவும். தடுப்பூசியை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. 34 நாட்களுக்குள் ஒரு கோடி தடுப்பூசியை போட்ட நாடு நம்நாடு. எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பிரதமர் விஞ்ஞானிகளின் முயற்சியால் கொரோனாவில் இருந்து விடுபட தடுப்பூசி நமக்கு மிகப்பெரிய நல்ல வாய்ப்பாக உள்ளது. கொரோனா தொற்று முழுமையாக நீங்காமல் இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் முககவசம் அணிய வேண்டும் என்றார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான நன்மைகள் நிச்சயம் நடக்கும். நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுரிமை குறித்த கேள்விக்கு சட்டரீதியாக அனைவரும் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.