சின்னத்திரை சித்ரா நடித்த ‘கால்ஸ்’ திரைப்படம் – வெளியீட்டு தேதி அறிவித்தது படக்குழு

சின்னத்திரை நடிகை மறைந்த சித்ரா சினிமாவில் முதன்முறையாக  நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின்ன வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு

பிரபல டிவி சேனலில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர், குடும்பப் பிரச்னையால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இறப்பதற்கு முன்பு சித்ரா சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினாக ’கால்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே அவரின் கடைசி திரைப்படமாக ஆகிவிட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சபரீஷ் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ட்ரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன், ட்ரைலரை சித்ராவின் அப்பா காமராஜும், அம்மா விஜயாவும்  வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘கால்ஸ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று  வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 + = 85