சரோஜா தேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையை சார்ந்தவர்களுக்கான 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பின்னணி பாடகி ஜமுனா ராணிக்கும்  கலைமாமணி விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதாவுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.சி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டி.சி நடிகர் நந்தகுமாருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, இயக்குனர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லியாகத் அலிகான், கவுதம் மேனன், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சௌகார் ஜானகி, நடிகர்கள் ராமராஜன், யோகி பாபு, தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு  உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 − = 33