பெண்கள் முன்னேற்றத்தில் அக்கரைக் கொண்ட ஒரே அரசு அதிமுக அரசு: தமிழக முதல்வர்

தமிழகத்தில் மட்டும் தான் பெண்கள் பாதுகாப்பாகவும் அதே சமயம்  எல்லா துறைகளிலும் சாதிக்கவும் முடிகிறது. பெண்கள் முன்னேற்றத்தில் அக்கரைக் கொண்ட ஒரே அரசு அதிமுக தலைமையிலான தமிழக அரசு என்று களக்காடு பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தியாவிலேயே, பெண்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது பேசிய அவர்; பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சி அதிமுக. பெண்களுக்கு 50%இட ஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் உள்ளிட்டவற்றை கொண்டுவந்தது அதிமுக அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இல்லை; தமிழகத்தில் தான் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவிலேயே, பெண்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பெண்கள் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளோம். 2,94,000 மகளிருக்கு பானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களோடு மக்களாக இருப்பதால், கஷ்டம் தெரிந்து தீர்வுகளை வழங்குகிறேன் எனக் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 − 16 =