விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஷ்வரி தலைமை வகித்தார். புதுக்கோட்டை தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் டெய்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கோவில் அடிவார சன்னதி தெரு, மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவாயில் அருகே உள்ள சாக்கடைகளை சரி செய்வது மற்றும் தற்காலிக கழிவரை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை ஊராட்சி துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் உள்பட 24 நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சின்னத்தம்பி, இலுப்பூர் சரக போலீஸ் டிஎஸ்பி அருள்மொழி அரசு, புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் பாரதிராஜா, தாசில்தார் சதீஸ் சரவணகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் பழனியாண்டி, முன்னாள் சேர்மன் சுப்பையா மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.