மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் டிராக்டர்களுடன் ஆர்ப்பாட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் டிராக்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிராக்டர்கள் ஊர்வலத்தை புதுக்கோட்டையின் நுழைவு  வாயிலாக உள்ள மச்சுவாடி. கேப்பரை. திருவப்பூர். பெருமாநாடு கிரசர் ஆகிய இடங்களில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  காவல்துறையினரின் இச்செயலை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் அணைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.எஸ்.சி.சோமையா தலைமையில்  விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.இராமையன். ராஜாங்கம் போராட்டத்தை துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர்  கண்டன உரையாற்றினார்.விவசிகள் போராட்டத்தை ஆதரித்து. திமுக(வ)மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன். சிபிஐஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன்.  திமுக மாவட்ட துணைச் செயலாளர். மதியழகன். சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி. தவிச மாநில துணைத்தலைவர் எஸ்.பொன்னுசாமி. சுந்தர்ராஜன்  ஆகியோர் உரையாற்றினர். சிபிஐ மாவட்ட செயலாளர் மு.மாதவன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

92 − = 83