பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழக கலைச்செல்வங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கட்சியின் முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாளுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, கட்சிக்கு கிடைத்திருக்கும் பெருமை. அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழக கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும் உருவாக்கி ஆளத் தொடங்கிய நாள் ஜனவரி 26, குடியரசு தினம். இந்தியக் குடிமக்களின் தினம். இந்திய நிர்வாகம் என்பது ஜனநாயக – சமத்துவ – சகோதரத்துவ – அறநெறி விழுமியங்களுடன் செயல்படும் என்பதை நாம் உலகுக்கு சொன்ன நாள் இது. அதே நெறிமுறைகளுடன் எந்நாளும் வாழ்வோம்! நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.