டெல்லி போராட்டத்தை திசை திருப்பவே கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது தமிமுன் அன்சாரி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

டெல்லி போராட்டத்தை திசை திருப்பவே குடியரசு தின நாளில் விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்று இருக்கிறது
கோட்டைபட்டினத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணியின் சார்பில் தேசிய கொடி கட்டப்பட்ட டிராக்டருடன் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக்குரலை பதிவு செய்தனர்

டெல்லியில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் குடியரசு தின விழா அன்று முறையாக அனுமதி பெற்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் அமைதி ஊர்வலத்தை நடத்தியவர்கள் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.விவசாயிகள் வன்முறையாளர்கள் அல்ல உண்மையான வன்முறையாளர்கள் விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்கள் காவல்துறை அவர்களை ஏன் கைது செய்யவில்லை

டெல்லி செங்கோட்டைக்குள் அவர்கள் நுழைந்தது ஒரு புரட்சியாக இந்தியா முழுவதும் பார்க்கப்படுகிறது.விவசாயிகள் வேளாண் சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று சொல்கிறார்கள் இது நள்ளிரவிலே இயற்றப்பட்ட சட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொண்டுவரப்பட்ட சட்டமே தவிர விவசாயிகளுக்கு அல்ல விவசாயிகள் விரும்பாத சட்டத்தை ஏன் விவசாயிகள் மீது திணிக்கிறீர்கள்

72வது இந்தியாவின் குடியரசு தினத்தை இன்று போர்க்களமான அதற்கு காரணம் பிரதமர் மோடி சர்வாதிகாரம் என்றும்போராட்டக் களத்தில் குடியரசு தினநாளில் உயிரிழந்துருக்கக்கூடிய விவசாயிக்கு 10 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார் இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மாநில விவசாய அணி செயலாளர் அப்துல்சலாம், மாவட்ட செயலாளர் முபாரக் அலி,தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர்அலி,மாவட்ட துணைச் செயலாளர்கள் செய்யது அபுதாகிர், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி,ஒன்றிய செயலாளர் முஜிபுர்ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 3